முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / COMPETITIVE EXAMS : போட்டி தேர்வுகளுக்கான நவம்பர் மாத முக்கிய நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு -3!

COMPETITIVE EXAMS : போட்டி தேர்வுகளுக்கான நவம்பர் மாத முக்கிய நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு -3!

போட்டி தேர்வு

போட்டி தேர்வு

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் இமயமலை யாக்கை 'உணவு விலங்கு' என்று ஏற்றுக்கொண்டனர்.

 • Last Updated :
 • Chennai, India

TNPSC , UPSC, SSC, ரயில்வே தேர்வு என்று பலதரப்பட்ட தேர்வுகளுக்கு நிறைய பேர் தயாராகிக்கொண்டு இருப்பீர்கள். எல்லா தேர்வுகளிலும் பொதுவாக வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், நடப்பு நிகழ்வுகள் இருக்கும். இது போன்ற பொதுவான படங்களை தினமும் கொஞ்சம் திருப்புதல் செய்ய ஏதுவாக நங்கள் தொகுத்து தர இருக்கிறோம். அந்த வகையில் இன்று நடப்பு நிகழ்வுகளை பற்றி பார்க்க இருக்கிறோம்.

போட்டி தேர்வுகளை பொறுத்தவரை தேர்வர்கள், படிக்கும் பாடங்களில் மட்டும் அல்லாது தினசரி தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்பதை சோதிப்பதற்காகவே தேர்வுகளில் குறிப்பிட்ட அளவிலான நடப்பு நிகழ்வுகள் கேட்கப்படுகின்றன. அடுத்தடுத்த மாதங்களில் தேர்வுகள் வரவுள்ள நிலையில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரையான நடப்பு நிகழ்வுகளை படித்து வைத்திருப்பது முக்கியம்.

அதனால் இந்த தொகுப்பில் 2022 ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்த சில முக்கிய "சுற்றுசூழல் " சார்ந்த நடப்பு நிகழ்வுகளை விரிவாக பார்ப்போம். இது உங்கள் தேர்வுக்கு முக்கிய குறிப்புகளாக அமையும். செய்தியில் வந்த முக்கிய இடங்கள் மற்றும்  தகவல்களை பார்ப்போம்.

கிரேட் பேரியர் ரீஃப்:  The Great Barrier Reef

செய்தியில் வரக்காரணம் : வெப்பமயமாதல்  மற்றும் கடல் மாசுபாடு காரணமாக பவள பாறைகள் எல்லாம்  ஆபத்தில் ஆழ்ந்துள்ளது என்று யுனெஸ்கோவால் நியமிக்கப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

 • அதன் காரணமாக 1981 இல் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்ட கிரேட் பேரியர் ரீஃப் "ஆபத்தில் உள்ள" உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஐநா அறிவித்துள்ளது.
 • ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் 2,300 கிமீ பரப்பளவில் அமைந்துள்ள கிரேட் பேரியர் ரீஃப் உலகின் பெரிய பவளப்பாறைகள் அமைப்பு ஆகும்.
 • பவள பாலிப்கள் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பெருங்கடல்கள் மற்றும் கடல்களில் வாழும் சிறிய மற்றும் சதைப்பற்றுள்ள கடல் அனிமோன்கள் ஆகும்.  ஆழமற்ற நீரில் வாழும் இதனோடு  Zooxanthellae எனப்படும் நுண்ணிய ஆல்கேவுடன் வாழ்கின்றன.
 • கூட்டுவாழ்வு உறவைப் பகிர்ந்து கொள்ளும் இந்த ஆல்கா ஒளிச்சேர்க்கை திறன்களைக் கொண்டுள்ளது, இது பவள பாலிப்களுக்கு ஆற்றலை வழங்கும் . பதிலுக்கு, பாலிப்கள் Zooxanthellae க்கு பாதுகாப்பை வழங்குகின்றன. புவி வெப்பமயமாதல் காரணமாக பவளப்பாறைகள் உள்ள ஆல்கேக்கள் பாலிப்புகளை விட்டு சென்று விடுவதால் பாலிப்புகள் வெளிறிப்போகிறது.

மௌனா லோவா எரிமலை

 • மௌனா லோவா என்பது ஹவாய் தீவுக்கூட்டத்தின் தெற்கே உள்ள தீவான ஹவாய் பெரிய தீவை உருவாக்கும் ஐந்து எரிமலைகளில் ஒன்றாகும்.
 • இது கிலாவியா எரிமலைக்கு அருகில் வடக்கே அமர்ந்துள்ளது.
 • கிலாவியா 2018 ஆம் ஆண்டு வெடித்ததில் 700 வீடுகளை அழிந்தது.

  மௌனா லோவா 38 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்தது. அதன் பின்னர் 2022 நவம்பரில் வெடித்துள்ளது.

 • வரலாற்றுப்படி 1843 முதல் , இது 33 முறை இந்த எரிமலை வெடித்துள்ளது.
 • உலகில் உள்ள எரிமலைகளில் மிகப்பெரியதாக இது கருதப்படுகிறது. 2,035 சதுர மைல்கள் பரப்பளவுடையது. கடல் மட்டத்தில் இருந்து 13,680 அடி உயரத்தில் மௌனா லோவாவின் உச்சி அமைந்துள்ளது.

இமயமலை யாக்

 •  இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம்
 • இமயமலை யாக்கை 'உணவு விலங்கு' என்று ஏற்றுக்கொண்டனர்.

  உணவு விலங்குகள் என்பது  வளர்க்கப்பட்டு உணவு உற்பத்தி அல்லது நுகர்வுக்கு பயன்படுத்தப்படும் விலங்குகள் ஆகும்.

 • இமயமலை யாக் என்பது  உயரமான இமயமலைப்பகுதிகளில் வாழும் ஒரு வகை மாடு.
 • Bos Grunniens என்ற அறிவியல் பெயர் கொண்ட இதை வழக்கமாக  பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது. இதை இப்போது அதிகாரபூர்வமாக உணவு விலங்காக அரசே அறிவித்துள்ளது.
 • IUCN நிலை: பாதிக்கப்படக்கூடியது.(Vulnerable)
 • வாழ்விடம்: இமயமலைப் பகுதி முழுவதும் காணப்படுகிறது - ஹிமாச்சலம், உத்தரகண்ட், உத்தரபிரதேசம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம்
 • இந்த மாட்டிற்கான அச்சுறுத்தல்கள்: வாழ்விட இழப்பு, மரபணு கலப்பு மற்றும் வேட்டையாடுதல்.

இதையும் பாருங்க: Logical reasoning | ஓடையுடன் பயணிக்கும் படகின் வேகத்தையும் பயண நேரத்தையும் கண்டுபிடிங்க பார்ப்போம்!

குளோபல் கார்பன் பட்ஜெட் 2022

 • 2001 இல்

✓ சர்வதேச புவிக்கோளம்-உயிர்க்கோளம்

திட்டம்,

✓ சர்வதேச மனித பரிமாணங்கள் திட்டம்

உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றம்,

✓ உலக காலநிலை ஆராய்ச்சி திட்டம் மற்றும்

பன்முகத்தன்மை ஆகியவை இணைந்து நிறுவப்பட்ட குளோபல் கார்பன் திட்டம் (GCP) தான் இந்த குளோபல் கார்பன் பட்ஜெட் அறிக்கையை  வெளியிட்டு வருகிறது.

 • இந்த அறிக்கையின் முக்கிய நோக்கமே கார்பன் சுழற்சி குறித்த
 • உலகளாவிய நாடுகளின் முழுமையான நிலையை வைத்து தரவு பட்டியலை உருவாக்குவதே ஆகும்.

 • ஒரு மில்லியனில் 417.2 CO2 பாகங்கள் என்ற புதிய உலகளாவிய CO2 செறிவுகள் புதிய சாதனை அடைந்துள்ளது. இது சுற்றுசூழலில் அதிகப்படியான கார்பன் டை ஆக்ஸைடு இருப்பை காட்டுகிறது.
 • வளிமண்டல CO2 செறிவுகள் இப்போது 51%
 • தொழில்துறைக்கு முந்தைய நிலைகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

 • நாடுகளின் நிலைகளை ஒப்பிடுகையில், சீனாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும்  திட்டமிடப்பட்ட CO2 உமிழ்வை விட அசல் உமிழ்வு குறைந்துள்ளது.
 • ஆனால் அமெரிக்கா, இந்தியாவில் 6% வரை கார்பன் உமிழ்வு என்பது அதிகரித்துள்ளது.
top videos

  First published:

  Tags: Competitive Exams, Exam preparation