முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / COMPETITIVE EXAMS :போட்டி தேர்வுகளுக்கான நவம்பர் மாத முக்கிய  நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு - பாகம் 2

COMPETITIVE EXAMS :போட்டி தேர்வுகளுக்கான நவம்பர் மாத முக்கிய  நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு - பாகம் 2

போட்டித்தேர்வு தயாரிப்பு

போட்டித்தேர்வு தயாரிப்பு

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியாரால் உருவாக்கப்பட்ட ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

 • Last Updated :
 • chennai |

TNPSC , UPSC, SSC, ரயில்வே தேர்வு  என்று பலதரப்பட்ட தேர்வுகளுக்கு நிறைய பேர் தயாராகிக்கொண்டு இருப்பீர்கள்.  எல்லா தேர்வுகளிலும் பொதுவாக வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், நடப்பு நிகழ்வுகள் இருக்கும். இது போன்ற பொதுவான படங்களை தினமும் கொஞ்சம் திருப்புதல் செய்ய ஏதுவாக நங்கள் தொகுத்து தர இருக்கிறோம். அந்த வகையில் இன்று நடப்பு நிகழ்வுகளை பற்றி பார்க்க இருக்கிறோம்.

போட்டி தேர்வுகளை பொறுத்தவரை தேர்வர்கள், படிக்கும் பாடங்களில் மட்டும் அல்லாது தினசரி தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்பதை சோதிப்பதற்காகவே தேர்வுகளில் குறிப்பிட்ட அளவிலான நடப்பு நிகழ்வுகள் கேட்கப்படுகின்றன. அடுத்தடுத்த மாதங்களில் தேர்வுகள் வரவுள்ள நிலையில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரையான நடப்பு நிகழ்வுகளை படித்து வைத்திருப்பது முக்கியம்.

அதனால் இந்த தொகுப்பில் 2022 ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்த சில முக்கிய ‘அறிவியல்’ சார்ந்த நடப்பு நிகழ்வுகளை விரிவாக பார்ப்போம். இது உங்கள் தேர்வுக்கு முக்கிய குறிப்புகளாக அமையும்.

இந்திய உயிரியல் தரவு மையம்

 • நவம்பர் 2022 இல் புதிதாக இந்திய உயிரியல் தரவு மையம் (IBDC) ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் திறக்கப்பட்டது.இது வாழ்க்கை அறிவியலுக்கான இந்தியாவின் முதல் தேசிய தரவுக் களஞ்சியமாகும். Biotech-PRIDE வழிகாட்டுதல்களின்படி,
 • இந்தியாவில் பொது நிதியுதவி செய்யப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இந்த மையம் தேசிய தகவல் மையத்துடன் இணைந்தது செயலாற்றுகிறது.
 • உயிரியல் தரவு என்பது உயிரினங்கள் தொடர்பான  நியூக்ளிக் அமிலங்கள், புரத வரிசை, வளர்சிதை மாற்றங்கள் மற்றும்
 • பிற மூலக்கூறு,DNA வரிசை தரவு, மரபணு வகை தரவு,
 • எபிஜெனோமிக் தரவு, மற்றும் செயல்பாட்டு பண்புகள் என்று அனைத்து தகவல்களையும் குறிக்கிறது.
 • IBDC தரவுகள் FAIR முறையில் பகிர்தல் (கண்டுபிடிக்கக்கூடியது, அணுகக்கூடியது,
 • இயங்கக்கூடிய மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய) கொள்கையைக் கொண்டு இயங்குகிறது.
 •  FAIR தரவுக் கோட்பாடுகள் என்பது , 2016 இல் விஞ்ஞானிகள் கூட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் தரவுகள் மறுபயன்பாட்டை ஆதரிக்கும் நிறுவனங்கள் இணைந்து வகுத்த  கொள்கைகளின் தொகுப்பாகும்.
 • மேலும் இந்த தரவுகளில் இந்திய சார்ஸ்-கோவி-2 ஜீனோமிக் கூட்டமைப்பின் (INSACOG) 2.6 லட்சம் சார்ஸ்-கோவ்-2 மரபணுக்களும்  வரிசைப்படுத்தப்பட்து சேமிக்கப்பட்டுள்ளன.

விக்ரம்-சப் ஆர்பிட்டல் (VKS ) ராக்கெட்

 • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியாரால் உருவாக்கப்பட்ட ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
 • VKS ராக்கெட்டை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் (SAPL) என்ற  அரசு சாரா நிறுவனம்/ஸ்டார்ட்அப் நிறுவனம்  உருவாக்கியுள்ளது.
 • நாட்டின் முதல் தனியார் ராக்கெட் என்பதை தவிர, இது 'பிரரம்ப்' என பெயரிடப்பட்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் முதல் பணியாகவும் இருக்கும். வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் ஒரு  பேலோட் உட்பட மொத்தம் மூன்று பேலோடுகளை விண்வெளியில் கொண்டு சேர்த்துள்ளது.
 • இது ஒரு நிலை சுழல் நிலைப்படுத்தப்பட்ட திட உந்துசக்தி ராக்கெட் ஆகும். 550 கிலோகிராம் எடை கொண்ட இந்த ராக்கெட் அதிகபட்சமாக 101 கிலோமீட்டர் உயரத்திற்குச் சென்று மீண்டும் பூமியில் -கடலில்விழுகிறது.
 • ஸ்கைரூட் தனது ராக்கெட்டுகளை ஏவுவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் ஸ்டார்ட்அப் ஆகும்.

INCOVACC

 •  இது உலகின் முதல் இன்ட்ரா-நாசல்(மூக்கின் வழியாக எடுத்துக்கொள்ளும்) தடுப்பூசியாகும்.இதை கோவிட் பூஸ்டர் டோஸ்களாக பயன்படுத்த இந்திய மருந்துகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) ஒப்புதல் அளித்துள்ளார்.
 •  இது ஒரு அடினோவைரஸ் வைரஸ் வெக்டார்டு மறுசீரமைப்பு நகலெடுப்பு (recombinant replication deficient adenovirus virus vectored vaccine)முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியாகும் 
 • அடினோவைரஸ் என்பது நேரியல் இரட்டை இழைகள் கொண்ட அணு-பிரதிபலிப்பு டிஎன்ஏ வைரஸ் ஆகும்
 • இந்தத் தடுப்பூசிஉருவாக்குதல் மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பயோடெக்னாலஜி துறையின் கோவிட் சுரக்ஷா திட்டம் பகுதியளவு நிதிஉதவி அளித்துள்ளது.

பிஎஸ்எல்வி-சி54- PSLV-C54

இஸ்ரோ நவம்பர் மாதத்தில், ஓசன்சாட்-3(OCEANSAT -3), மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை  PSLV-C54  என்ற ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தியது.

8 நானோ செயற்கைகோள்களில் பூட்டான்சாட், Pixxel நிறுவனத்தின் 'ஆனந்த்', அமெரிக்காவின் தைபோல்ட் மற்றும் ஆஸ்ட்ரோகாஸ்ட் உள்ளிட்டவை முக்கியமானதாகும். 

இதையும் பாருங்க: போட்டி தேர்வுகளுக்கான நவம்பர் மாத முக்கிய நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு! பாகம் 1

பூட்டான் சட்:

பூட்டானுக்கான ISRO நானோ செயற்கைக்கோள்-2 (INS-2B) விண்கலம் INS-2 பஸ்ஸுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. INS-2B ஆனது நானோஎம்எக்ஸ் மற்றும் ஏபிஆர்எஸ்-டிஜிபீட்டர் என இரண்டு பேலோடுகளைக் கொண்டிருக்கும். நானோஎம்எக்ஸ் என்பது ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் சென்டரால் (எஸ்ஏசி) உருவாக்கப்பட்ட மல்டிஸ்பெக்ட்ரல் ஆப்டிகல் இமேஜிங் பேலோட் ஆகும்.

ஆனந்த்:

ஆனந்த் நானோ செயற்கைக்கோள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் உள்ள மைக்ரோசாட்லைட்டைப் பயன்படுத்தி பூமியைக் கண்காணிப்பதற்காக மினியேட்டரைஸ் செய்யப்பட்ட புவி-கவனிப்பு கேமராவின் திறன்கள் மற்றும் வணிகப் பயன்பாடுகளை நிரூபிக்கும் தொழில்நுட்ப சாதனம் ஆகும்.

டெலிமெட்ரி, டெலி-கமாண்ட், எலக்ட்ரிக்கல் பவர் சிஸ்டம், ஆட்டிட்யூட் டிடர்மினேஷன் மற்றும் கண்ட்ரோல் சிஸ்டம் (ஏடிசிஎஸ்), ஆன்-போர்டு கம்ப்யூட்டர்கள் போன்ற அனைத்து துணை அமைப்புகளுக்கும் இடமளிக்கும் சாட்பஸ் கொண்ட மூன்று-அச்சுகளில் (axis) நிலைப்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் இது.

ஆஸ்ட்ரோகாஸ்ட்

ஆஸ்ட்ரோகாஸ்ட், என்பது இன்டர்நெட் ஆஃப் திங்ஸின் (IoT) தொழில்நுட்ப டெமான்ஸ்ட்ரேட்டர் செயற்கைக்கோள் ஆகும். இதன் 4  விண்கலங்கள் ISISpace QuadPack டிஸ்பென்சரில் வைக்கப்பட்டுள்ளன.டிஸ்பென்சர் செயற்கைக்கோளை மாசுபடாமல் பாதுகாக்கிறது.

தைபோல்ட்

தைபோல்ட் என்பது 0.5U விண்கலப் பஸ்ஸாகும். இது விரைவான தொழில்நுட்ப செயல்விளக்கம் மற்றும் விண்மீன் உருவாக்கத்தை செயல்படுத்துவதற்கு ஒரு தகவல் தொடர்பு பேலோடாக செயல்படுகிறது. 

top videos

  துருவ விண்வெளி ஆர்பிட்டல் டிப்ளோயரைப் பயன்படுத்தி செயற்கைக்கோள்கள் குறைந்தபட்சம் 1 வருடம் முழுவதும் குறிப்பிட்ட பணி செயல்பாடுகளைச் செய்யும்.

  First published:

  Tags: Competitive Exams, Exam preparation