•  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார். Image: Twitter
  •  23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. Image: Twitter
  •  இதன், மகளிருக்கான  800 மீட்டர் ஒட்டப் பந்தயத்தின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் கோமதி மாரிமுத்து பங்கேற்றார். Image: Twitter
  •  இதில், மின்னல் வேகத்தில் ஓடிய கோமதி, சக வீராங்கனைகளை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தார். இவர் பந்தய இலக்கை 2 நிமிடம்  2.70 விநாடிகளில் கடந்தார்.
  •  ஆசிய தடகள சாம்பியன்ஷிப்  2019-ல் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்ற வீராங்கனை என்ற பெருமை கோமதி மாரிமுத்துவையே சேரும். இவருடன்  ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
  •  இந்தியா இந்த போட்டியில் இதுவரையில் மொத்தம் 2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Skip the ad in seconds
SKIP AD