தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா தாமதமாவதற்கு ஆளுநரே காரணம் என அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டிய நிலையில், அதனை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 7 பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கோரியிருப்பதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. பல்கலைக்கழங்களில், பட்டமளிப்பு விழாவை ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டிய நிலையில், அது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பு விளக்கமளித்துள்ளது.
அனுமதி கோரியிருக்கும் பல்கலைக்கழங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் அனுமதி அளித்திருப்பதாகவும், அதன்படி, சென்னை பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 7 பல்கலைக்கழங்களில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க... தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு பங்கேற்காதது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
அதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மட்டுமே கொரோனா பரவலால் 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து மாணவர்களுக்கு தற்போது பட்டங்கள் வழங்கப்பட உள்ளது என்று ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாதது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டபோது, துணைவேந்தர் நியமிக்கப்படாததால் பட்டமளிப்பு விழாவை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Governor, Graduation, RN Ravi, Tamil Nadu