முகப்பு /செய்தி /கல்வி / கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 பள்ளிகள் திறப்பு... அமைச்சர் அறிவிப்பு..!

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 பள்ளிகள் திறப்பு... அமைச்சர் அறிவிப்பு..!

பள்ளிகள் திறப்பு

பள்ளிகள் திறப்பு

பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் இன்றுடன் முடிவடைந்து. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கும் தேதியைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

அதன்படி, ஜூன் 1 ஆம் தேதி அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கல்வியாண்டில் நடைபெறவுள்ள 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளையும் அமைச்சர் அறிவித்தார்.

Also Read : Tamil Live Breaking News | அடுத்த ஆண்டிற்கான பொதுத்தேர்வு தேதி - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

அதன்படி, 2023-24 ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 18 ஆம் தேதி தொடங்கும் என்றும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19 ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Department of School Education, Minister Anbil Mahesh, Tn schools