முகப்பு /செய்தி /கல்வி / கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு?

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு?

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்குக் கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வும், ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வும் நிறைவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், 6 முதல் 12 ஆம் வகுப்புக்குக் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

Also Read : 12th Public Exam Result | 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

top videos

    மேலும், LKG முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 2 ஆம் வாரம், வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Department of School Education, Tn schools