11 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான கால அட்டவணைகளை தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மார்ச் / ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. 8,03,385 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.03 சதவிகிதமாகும். சரியாக 47,934 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
எனவே, நடந்து முடிந்த பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ம் தேதி உடனடி சிறப்புத் துணைத் தேர்வு நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது. அனைத்து பாடங்களுக்கும் நடத்தப்படும் இந்த துணைத் தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல், இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேயே உயர்கல்வியைத் தொடர முடியும்.
இதையும் வாசிக்க: “நந்தினிகளின் உயரங்கள் தான் தமிழ்நாட்டின் அடையாளம்..!” - முதலமைச்சர் ஸ்டாலின்
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு (Govt Examination Service centre) சென்று ஆன்லைன் மூலம் பதிவேற்ற வேண்டும். இந்த சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான உரிய நாட்கள் முதலான விவரங்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். எனவே, இந்த துணைத் தேர்வு குறித்து அவ்வப்போதைய நிலவரங்களை தெரிந்து கொள்ள பெற்றோர் மற்றும் மாணவர்கள் www.dge.tn.gov.in/ என்ற அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Examination