முகப்பு /செய்தி /கல்வி / சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 86.86% தேர்ச்சி... 71 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்..!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 86.86% தேர்ச்சி... 71 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்..!

12ம்  வகுப்புத் தேர்வு முடிவுகள்

12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

12th Result | சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 5,899 மாணவர்கள் எழுதினர். இதில் 5,124 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாநிலம் முழுவதும் தேர்வெழுதிய 8,03,385 பேரில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சிப் பெற்றவர்களின் விகிதம் 94.03% ஆகும்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 86.86 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.  நடப்பாண்டில்,  12ம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 5,899 பேர் எழுதினார்கள். இதில் 5,124 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.86% ஆகும்.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில், ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 71 ஆக உள்ளது. வேதியியல் பாடத்தில் ஒருவரும், வணிகக் கணிதம் பாடத்தில் இரண்டு மாணவர்களும், பொருளியல் பாடத்தில் 7 மாணவர்களும், வணிகவியல் பாடத்தில் 20 மாணவர்களும், கணக்கு பதிவியல் பாடத்தில் 25 மாணவர்களும், கணினி அறிவியல் பாடத்தில் 3 மாணவர்களும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 9 மாணவர்களும் 100  மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அதேபோன்று, 52 பேர் 551க்கு மேல் மதிப்பெண்களும், 264 பேர் 501லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 456 பேர் 451லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

இதையும் வாசிக்க12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியா? கவலை வேண்டாம்.. துணை தேர்வு தேதி அறிவிப்பு

top videos

    தேர்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டை போலவே புலியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 100% பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. சுப்பராயன் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.29% இரண்டாம் இடத்தையும், நெசப்பாக்கம் சென்னை மேல்நிலைப்பள்ளி 97.89% மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. கடந்தாண்டு, தேர்ச்சி விகிதம் 86.47 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 86.86 ஆக சற்று அதிகரித்துள்ளது.

    First published:

    Tags: 12th exam, 12th Exam results