முகப்பு /செய்தி /கல்வி / ஆண்டிற்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படுமா..? மத்திய அமைச்சர் சொன்ன பதில்...!

ஆண்டிற்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படுமா..? மத்திய அமைச்சர் சொன்ன பதில்...!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நீட் நுழைவுத் தேர்வை ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தத் திட்டமுள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • New Delhi, India

இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளைப் பயிலத் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் சந்த் பிந்த் நுழைவுத் தேர்வு தொடர்பாக அவையில் பல கேள்விகளை எழுப்பினார்.ஜேஇஇ தேர்வைப் போன்று இளங்கலை நீட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ள மத்திய இணையமைச்சர், ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வை எழுத வாய்ப்பளிக்கும் வகையிலான பரிந்துரை எதுவும் இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், திறமையான மாணவர்கள் நாட்டின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் பயில்வதற்காக வாய்ப்பை நீட் தேர்வு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

Also Read : “ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தா தேர்வு எழுதலாமா?... அது அப்போ சொன்னது” ... அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்..!

முறைகேடுகளைக் களைந்து, வெளிப்படைத் தன்மையுடன் மருத்துவ சேர்க்கையை நீட் தேர்வு உறுதிப்படுத்துவதாகவும் மத்திய இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Neet, Neet Exam, Parliament