முகப்பு /செய்தி /கல்வி / 11th Result Direct link | 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது... ரிசல்ட் செக் செய்வது எப்படி?

11th Result Direct link | 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது... ரிசல்ட் செக் செய்வது எப்படி?

மாதிரி படம்

மாதிரி படம்

Tamil Nadu 11th Exam Results | குறுஞ்செய்தி மூலமாக பொதுத்தேர்வு முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

11ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 

2023ம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 13ஆம் முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்தது. இந்த பொதுத் தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

இந்த நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.  அதில் 90/93 சதவிகிதம் மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் sms மூலமாகவும் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

top videos
    First published:

    Tags: 11th Exam, Exam results, Public exams