10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் 3 இடங்கள் பிடித்த மாவட்டங்கள் பட்டியல் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின.
தமிழ்நாட்டில் 91.39 சதவிகிதம் பேர் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 பேரும், மாணவர்கள் 4,04,904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.50 சதவிகிதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 3718 பள்ளிகளில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க | 10ஆம் வகுப்பு ரிசல்ட் லைவ் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
பெரம்பலூர் 97.67 சதவிகிதத்துடன் முதலிடமும், சிவகங்கை 97.53 சதவிகிதத்துடன் இரண்டாம் இடம், விருதுநகர் மாவட்டம் 96.22 சதவிகிதத்துடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 10th Exam, 10th Exam Result