முகப்பு /செய்தி /கல்வி / 10th ரிசல்ட் வெப்சைட் வேலை செய்யவில்லையா? உங்க செல்போனுக்கே மதிப்பெண்கள் வந்துவிடும்!

10th ரிசல்ட் வெப்சைட் வேலை செய்யவில்லையா? உங்க செல்போனுக்கே மதிப்பெண்கள் வந்துவிடும்!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்

10th results 2023 | தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் இந்த வலைதளங்களில் ரிசல்ட்டை தெரிந்துகொள்ள தேடுவதால் இந்த இணையதளங்கள் பிஸியாக இருக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதேபோல், மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

இந்த இரண்டு பொதுத்தேர்வு முடிவுகளும் ஒரேநாளில், வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, 10, 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியிடப்பட உள்ளன.

தேர்வு முடிவுகளை மாணவர்கள்     www.tnresults.nic.in,   www.dge.tn.nic.in    ,ஆகிய இணையதளங்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் இந்த வலைதளங்களில் ரிசல்ட்டை தெரிந்துகொள்ள தேடுவதால் இந்த இணையதளங்கள் பிஸியாக இருக்கும். இதனால் உங்களுக்கு ரிசல்ட் வர தாமதமாகலாம் என்று வருந்த வேண்டாம்.

top videos

    மற்றோரு ஆப்ஷனாக பள்ளியில் கொடுக்கப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகளை அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் யாரும் பதற்றம் கொள்ள தேவையில்லை. வீட்டில் செல்போன் இல்லை, ஆன்லைன் வசதியில்லை என்றால் மற்றோரு ஆப்ஷனாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் மையத்திலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    First published:

    Tags: 10th Exam, 10th Exam Result