முகப்பு /செய்தி /கல்வி / 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: 91.39% தேர்ச்சி... 78,706 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை

10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: 91.39% தேர்ச்சி... 78,706 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை

10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

தேர்வு எழுதிய மாணவர்களில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். 78,706 மாணவர்கள் தேர்ச்சி பெற தவறியுள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu |

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 9 லட்சத்துக்கும் அதிகமான (9,14,320) மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 8,35,614 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது, தேர்வு எழுதிய மாணவர்களில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். 78,706 மாணவர்கள் தேர்ச்சி பெற தவறியுள்ளனர். பாலினம் வாரியாக, மாணவியர்கள் 94.66 தவீதம் பேரும், மாணவர்கள் 88. 16 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் உயர்கல்வியை அணுகுவதற்காக முக்கிய திறவுகோளாக 10ம் வகுப்பு கல்வி உள்ளது. நாட்டில் பள்ளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 26 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில், 1 முதல் 8 வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 18 கோடிக்கும் அதிகமாகும். 9, 10ம் வகுப்பு வரையிலான உயர்கல்வியில் 3.8 கோடிக்கும் அதிகமானோரும், 11, 12-ம் வகுப்பு வரையிலான மேல்நிலை கல்வியில் 2.8 கோடிக்கும் அதிகமானோரும் உள்ளனர்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் (UDISE+) அறிக்கை

அதாவது, 8ம் வகுப்புக்கு பிந்தைய கல்வியில் பெரும்பாலான மாணவர்கள் பள்ளியை விட்டே வெளியேறுகின்றனர். குறிப்பாக, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் ஆண்டுக்கு சுமார் 1 கோடி மாணவர்கள் பள்ளி வாழ்க்கையை விட்டு வெளியேறும் சூழல் நிலவுகிறது. ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் இதர சான்றிதழ் படிப்புகளின் எண்ணிக்கை 20- 30 லட்சம் வரை இருக்கலாம் என்று மதிப்பிடும் நிலையில், 70 லட்சம் மாணவர்கள் எந்தவித கல்வியையும் பெறாதவர்களாக உள்ளனர்

உதாரணமாக, 2022-23 கல்வியாண்டில், உத்தர பிரதேச மாநிலத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டது. அதேபோன்று, மத்திய பிரதேம் மாநிலத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 10ம் வகுப்பில் தோல்வி அடைந்து வெளியேறுகின்றனர்.

top videos

    6 முதல் 14 வயது வரையிலான (1 முதல் 8ம் வகுப்பு) அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை சட்டப்பூர்வமாக வழங்கும் வகையில் கல்வி உரிமைச் சட்டம் 2009 கொண்டு வரப்பட்டது. அதேபோன்று, கட்டாயக் கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் 12ம் வகுப்பு வரை சட்டப்பூர்வமாக வழங்கும் வகையில் சட்ட முன்னெடுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான உயர்கல்வியில் மத்திய, மாநில அரசுகளின் நிதி முதலீடு படிப்படியாக அதிகரிக்க வேண்டும்" என்றும் கூறுகின்றனர்

    First published:

    Tags: 10th Exam, 10th Exam Result