முகப்பு /செய்தி /கல்வி / தள்ளிப்போன பள்ளிகள் திறப்பு தேதி... எந்தெந்த வகுப்புகளுக்கு எப்போது? - முழு விபரம் இதோ!

தள்ளிப்போன பள்ளிகள் திறப்பு தேதி... எந்தெந்த வகுப்புகளுக்கு எப்போது? - முழு விபரம் இதோ!

பள்ளிகள் திறப்பு தேதி?

பள்ளிகள் திறப்பு தேதி?

School Reopen 2023: தனியார் பள்ளிகளின் திறப்பு தேதியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகளின் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

School Reopen 2023:  தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெப்பம் அதிகரித்ததால், ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. 15க்கும் மேற்பட்ட இடங்களில் 100 டிகிரி ஃபாரண்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகிறது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பதை தள்ளிவைப்பது குறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.

இதன்பின்னர் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தனியார் பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புது அறிவிப்பு!

அரசு அறிவித்தப்படி, தனியார் பள்ளிகளின் திறப்பு தேதியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகளின் சங்கங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில், சில சிபிஎஸ்இ பள்ளிகள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளன.

First published:

Tags: Government school, School Holiday, School Reopen