முகப்பு /செய்தி /கல்வி / கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

மாதிரி படம்

மாதிரி படம்

எந்த வருடமும் இல்லாத அளவுக்கு தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதனால் பள்ளிகள் திறப்பு தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பள்ளிகள் திறப்பு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் இறுதியில் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்தன. இதனையடுத்து, தற்போது கோடை விடுமுறையில் மாணவர்கள் உள்ளனர். ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ஆனால், எந்த வருடமும் இல்லாத அளவுக்கு தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது. ஆகவே, பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம் என்ற தகவல்கள் வெளிவந்தன. இந்த தகவல்களுக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஸ், “ “ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழக முழுவதும் பள்ளிகள் அதே தேதியில் திறக்கப்படும். ஜூன் 1ம் தேதி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை திறக்கப்படும். ஜூன் 5ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: School open, School students