முகப்பு /செய்தி /கல்வி / பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... நாளை முதல் கோடை விடுமுறை தொடக்கம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... நாளை முதல் கோடை விடுமுறை தொடக்கம்..!

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்றுடன் நடப்பு கல்வியாண்டு நிறைவு பெறுகிறது. அதன்பின் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

Also Read : கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்... வந்தது முக்கிய அறிவிப்பு..!

எல்.கே.ஜி முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 2 ஆம் வாரம், வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: School students, Tn schools