முகப்பு /செய்தி /கல்வி / School Reopen | ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு?

School Reopen | ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு?

கோப்பு படம்

கோப்பு படம்

தமிழகம் முழுவதும் அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 7ம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதியும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் ஐந்தாம் தேதியும் பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் அரசுக்கு முன் வைக்கப்பட்டு வருகின்றன.

top videos

    எனவே ஜூன் 7ம் தேதி வாக்கில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அனைத்து வகுப்புகளுக்குப் பள்ளிகளத் திறக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    First published:

    Tags: School open