முகப்பு /செய்தி /கல்வி / School Reopen | ஜூன் 12 பள்ளிகள் திறப்பு... அதிரடியாக அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ்..

School Reopen | ஜூன் 12 பள்ளிகள் திறப்பு... அதிரடியாக அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ்..

கோப்புப் படம்

கோப்புப் படம்

Tamil Nadu School Reopen Date | அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் ஜூன் 12 பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 1ஆம் தேதிக்கு பதிலாக 7ம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதற்கேற்ப அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதனால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” என்று அதிரடியாக அறிவித்தார். இதனால் மாணவர்களின் கோடை விடுமுறை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: School Reopen