முகப்பு /செய்தி /கல்வி / அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 22 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 22 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்!

அரசு கல்லூரி மாணவர்கள் சேர்க்கை

அரசு கல்லூரி மாணவர்கள் சேர்க்கை

சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு 29ஆம் தேதி மே முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்றும், பொது கலந்தாய்வு ஜூன் 1ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

  • Last Updated :
  • Tamil Nad, India

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை 2023 (TNGASA 2023)  இணைய விண்ணப்பித்திற்கான செயல்முறை இன்றுடன் முடிவடைகிறது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு www.tngasa.in என்ற இணைய பக்கம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாணாக்கர்கள் கூடுதலாக கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்ய ஏதுவாக இந்த ஆண்டு முதல் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பம் மற்றும் பதிவுக்கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூபாய் 50 /- ம், SC /ST பிரிவினருக்கு ரூபாய் 2 /- ம் ஆக மாற்றப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கதமிழக பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடுக்கு ஓபிசி சான்றிதழ் கேட்பதா? ராமதாஸ் ஆவேசம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு 29ஆம் தேதி மே முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்றும், பொது கலந்தாய்வு ஜூன் 1ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. ஜூன் ஒன்று முதல் பத்தாம் தேதி வரையிலும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரையிலும் நடைபெறுகிறது.

top videos
    First published:

    Tags: College Admission, Engineering counselling, Higher education