முகப்பு /செய்தி /கல்வி / தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம்....

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம்....

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளைப் போன்று முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் வழக்கமாக ஜூன் மாதத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளைப் போன்று முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை இன்று மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.

மேலும், "அரசு பள்ளிகளைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் அனைத்து மாவட்டங்களிலும் வாகனப் பேரணியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கொளத்தூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், வாகனப் பேரணியை தொடங்கி வைக்கிறார். வரும் 28-ம் தேதி வரை இந்தப் பேரணியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: Government school, Students, Tamil Nadu, Tn schools