மாணவர்களிடம் கிடைத்த வரவேற்பை அடுத்த செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 8000க்கும் மேற்பட்ட இடங்களை அதிகரிக்க பொறியியல் கல்லூரிகள் திட்டமிட்டுள்ளன.
தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக, பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இறங்கு முகத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என கணினி சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
மெக்கானிக்கல், சிவில் போன்ற படிப்புகளில் இணைவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், கணினி சார்ந்த பாடப்பிரிவுகளில் 8,490 இடங்களை அதிகரிக்க அனுமதி கேட்டு கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பாடப்பிரிவுகளில் 2, 520 இடங்களும், தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவில் 2, 280 இடங்களும் அதிகரிக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதே போன்று, கணினி அறிவியல் பாடப்பிரிவில் 1,800 இடங்களையும், சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவில் 1,200 இடங்களையும் அதிகரிக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பாடப்பிரிவுகளில் 3,696 இடங்களை குறைக்க அனுமதி கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.