தமிழகத்தில் இந்த ஆண்டு, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வளவு குறையும் என்பது தொடர்பான விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியாகின. அதனைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ பிளஸ்டூ தேர்வு முடிவு 12ஆம் தேதி வெளியிடப்பட்டது.
பொதுத் தேர்வில் கிடைத்த பெற்ற மதிப்பெண்கள் மூலம், மாணவர்கள் பொறிறியல் போன்ற உயர் கல்விக்கு ஆயத்தமாகி வருகின்றனர். இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், கட் ஆஃப் மதிப்பெண் 200க்கு கணக்கிடப்படுகிறது.
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கட் ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைவிட குறைய வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்
கடந்த ஆண்டில் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கிடைத்த கல்லூரி, இம்முறை 199.5 மதிப்பெண் வாங்கியவர்களுக்கு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல் சென்ற ஆண்டில், 195 மதிப்பெண் வாங்கியவர்களுக்கு கிடைத்த கல்லூரிகள் , இம்முறை 193.5 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு கிடைக்கக்கூடும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
சென்ற ஆண்டில் 190 மதிப்பெண் பெற்றவர்களுக்கு கிடைத்த கல்லூரி, இம்முறை 188 மதிப்பெண் வாங்கியவர்களுக்கு கிடைக்கக்கூடும். எனினும், கட் ஆஃப் மதிப்பெண் 120 முதல் 150 வரை பெறுபவர்களுக்கு, இம்முறை நல்ல கல்லூரிகள் கிடைக்க முந்தைய ஆண்டைவிட கடும் போட்டி இருக்கும் என்றும் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
12ம் வகுப்பு பொதுத் தேர்வில், உயிரியல் பாடத்தில் இம்முறை மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளதால், அது சார்ந்த படிப்புகளுக்கான கட் ஆஃப் உயர வாய்ப்புள்ளது என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 12th Exam results, Engineering counselling, Engineering student