முகப்பு /செய்தி /கல்வி / ப்ளஸ் டூ ரிசல்ட் வெளியீடு.. இந்த லிங்கில் தான் செக் செய்ய வேண்டும்!

ப்ளஸ் டூ ரிசல்ட் வெளியீடு.. இந்த லிங்கில் தான் செக் செய்ய வேண்டும்!

மாதிரி படம்

மாதிரி படம்

Tamil Nadu Board Results 2023 | மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் முடிவுகளை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிடுகிறார். இதனை காலை 9.30 மணிமுதல் இணையதளம் மூலம் மாணவர்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதிவரை நடைபெற்றன. இதில், 8 லட்சத்து 51 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகளை சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளை, www.dge.tn.gov.in, 

www.tnresults.nic.in,  www.dge.tn.nic.in  ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க :  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது - 94.03 சதவீதம் தேர்ச்சி விகிதம்

top videos

    மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் முடிவுகளை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தேசிய தகவல் மையத்திலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பள்ளிகளில் இன்றே பெற்றுக் கொள்ளவும் அரசு தேர்வுகள் துறை ஏற்பாடு செய்துள்ளது.

    First published:

    Tags: 12th exam, 12th Exam results, Public exams