தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு தொடங்கி நடைபெற்று முடிந்தது. இத்தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்.
இந்நிலையில் தேர்வு முடிவுகளை இன்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்
இந்நிலையில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாடு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்த மதிப்பெண் 600 க்கு 600 மதிப்பெண் வாங்கி சாதனைபடைத்துள்ளார். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடமும் தமிழகத்தில் முதலிடமும் பெற்றுள்ளார்.
மேலும் இப்பள்ளி மாணவி நந்தினி ஒரே பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்துவந்துள்ளார். மேலும் இப்பள்ளியின் தாளாளர் ஜெயபால், தலைமை ஆசிரியர் அகிலா, தமிழ் ஆசிரியர் அனுராதா, ஆங்கில ஆசிரியர் தீபா, மரிய சாந்தி ராஜலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் அதிக மதிப்பெண் பெறுவதற்கு ஊக்கமளித்ததாகவும் தனது வெற்றிக்கு தனது பெற்றோரும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார்.
நந்தினியின் தந்தை சரவணகுமார் தச்சு தொழிலாளியாக உள்ளார். நந்தினியின் அம்மா பாலபிரியா. நந்தினியின் சகோதரர் பிரவீன் ஆறாம் வகுப்பு படித்துவருகிறார்.
TN 12th Exam results : கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 12th Exam results