முகப்பு /செய்தி /கல்வி / TN 12th Exam Result: 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் நேரம்? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

TN 12th Exam Result: 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் நேரம்? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வை முடிவை வெளியிடும் அமைச்சர் அன்பில் மகேஷ்

பிளஸ் 2 தேர்வை முடிவை வெளியிடும் அமைச்சர் அன்பில் மகேஷ்

நடப்பாண்டில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை காலை, 9.30 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடுவார் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்ட அறிக்கையில், "நாளை காலை, 9.30 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். மேலும்,  இத்தேர்வு தொடர்பான புள்ளி பகுப்பாய்வு அறிக்கையினை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 9.40 மணி வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரிசல்ட் பார்ப்பது எப்படி?

தேர்தல் முடிவுகள், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்னும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

மேலும், தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்ததாள் நகலை கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை பார்க்க இங்கே கிளிக் செய்க

top videos

    மேலும், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் வரும் ஜுன்/ஜுலை மாதத்தில் நடைபெறும் சிறப்புத் துணைத் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல், இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேலே உயர்கல்வியைத் தொடர முடியும்.

    First published:

    Tags: 12th Exam results