10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் இன்றுடன் முடிவடைந்து நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி அன்று தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
Also Read : Tamil Live Breaking News | ஜூன் 5 ஆம் தேதி - தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர்
அதனைத்தொடர்ந்து, அடுத்த கல்வியாண்டில் நடைபெறவுள்ள 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை அறிவித்தார். அதன்படி, 2023-24 ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 18 ஆம் தேதி தொடங்கும் என்றும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19 ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 10th Exam, 12th exam, Minister Anbil Mahesh, Public exams, Tn schools