முகப்பு /செய்தி /கல்வி / பிளஸ் டூ பொதுத்தேர்வு : விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் டூ பொதுத்தேர்வு : விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும்

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதிவரை நடைபெற்றன. இதில், 8,51,000 பேர் கலந்துகொண்டனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகளை சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று காலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

இதில் 8, 36,593 மாணவர்கள் தேவெழுதிய நிலையில், 7,55,451 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சிப் பெற்றவர்களின் விகிதம் 94.03 ஆகும். மாணவர்களை விட மாணவிகளை கூடுதலாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5.36% ஆக இருந்தது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் இன்று காலை 11 மணிமுதல் வரும் சனிக்கிழமை மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:  அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்... 600/600 மதிப்பெண் பெற்று சாதித்த தச்சுத் தொழிலாளி மகள்

விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும் என்றும் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

top videos

    விடைத்தாள் நகலைப் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் 275 ரூபாயும், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதிப்பெண் பட்டியலை பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் வழியாக வரும் 12-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: 12th exam, 12th Exam results, Plus 2 Examination