முகப்பு /செய்தி /கல்வி / இன்ஜினியரிங் கட் ஆப் மதிப்பெண் குறையுமா...? கல்வியாளர்கள் சொல்வது என்ன? - ஓர் அலசல்

இன்ஜினியரிங் கட் ஆப் மதிப்பெண் குறையுமா...? கல்வியாளர்கள் சொல்வது என்ன? - ஓர் அலசல்

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

எஞ்சினீயரிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்வதில் கடும் போட்டி இருக்கும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொறியியல் படிப்பிற்கான கட் ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு சற்று குறையும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில், மார்ச் / ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 8,03,385 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 சதவிகிமாகும். சரியாக, 47,934 மாணவர்கள் தேர்ச்சிப் பெறவில்லை.

கணித பாடத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்ததால் கட் ஆப் குறைகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேதியியல், இயற்பியல் முக்கிய பாடங்களில் சென்டம் வாங்கியவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

12ம் வகுப்பில் கணித அறிவியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பெற்ற மொத்த மதிப்பெண்கள், 200 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டு (கணிதம் - 100 மதிப்பெண், வேதியியல்+ இயற்பியல் 100 மதிப்பெண்)  அடிப்படையில் பொறியியல் தரவரிசைப் பட்டியல்  தயாரிக்கப்படும்.

நடப்பாண்டில் கணித பாடத்தில் வெறும் 690 மாணவர்கள் மட்டுமே  100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்தாண்டில், இதைவிட மூன்று மடங்கு மாணவர்கள் கூடுதலாக 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  ஆனால், வேதியியல் பாடத்தில் கடந்தாண்டை விட, நடப்பாண்டில் இரண்டு மடங்கு பேர் கூடுதலாக 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  எவ்வாறாயினும், தரவரிசைப் பட்டியலை பொருத்த வரையில், இயற்பியல், வேதியலை விட இரண்டு மடங்கு கூடுதல் முக்கியத்துவம் கணித பாடத்திற்கு தரப்படுகிறது. எனவே, பொறியியல் கலந்தாய்வில்  கட் ஆப் மதிப்பெண் சற்றே குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், கடந்தாண்டு கணித பாடத்தில் 3,78,699 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்ற நிலையில், நடப்பாண்டில் 4,07, 284 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோன்று, வேதியியல், இயற்பியல் ஆகிய இரண்டு பாடங்களையும் சேர்த்து இந்தாண்டு கூடுதலாக 60, 623 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும், பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க; டி.டி.வி.தினகரன்- ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு.... முக்கிய அறிவிப்பு வருமா?

இதன் காரணமாக, நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளில் பெண்கள் சேர்க்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கட் ஆப் மதிப்பெண் சற்று கூடலாம் என்றும்  யூகிக்கப்படுகிறது.  மேலும், கடந்தாண்டு பொதுத்தேர்வில், 23,957 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், இந்தாண்டு 100% மதிப்பெண்கள் பெற்ற தேர்வர்களின் எண்ணிக்கை 32,501 ஆக அதிகரித்துள்ளது.          

பாடங்கள்2022 கல்வியாண்டு2023 கல்வியாண்டு
இயற்பியல்634812
வேதியியல்15003909
உயிரியியல்15411494
கணிதம்1858690
தாவரவியல்47340
விலங்கியல்22154
கணினி அறிவியல்38274618
வணிகவியல்46345678
கணக்குப் பதவியல்45406573
பொருளியல்11461760
கணினிப் பயன்பாடுகள்28184051
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்11511334

எவ்வாறாயினும், கலை அறிவியல் படிப்புகளில் வேதியியல் தாவரவியல் உயிரியல்,வணிகவியல் இயற்பியல், ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேருவதில் கடும் போட்டி இருக்கும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: 12th Exam results, Engineering counselling