2023 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 8,03,385 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 சதமாகும். இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும்
2021 கொரோன தொற்று காலம் நீங்கலாக, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தாண்டு தேர்ச்சிப் பெற்றவர்கள் விகிதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு, தேர்ச்சிப் பெற்றவர்கள் விகிதம் 93.76 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 94.03 ஆக சற்று அதிகரித்துள்ளது.
இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வுவில் மொழித் தேர்வு உள்ளிட்ட முக்கிய பாடங்களில் சராசரியாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்க வில்லை. முந்தைய ஆண்டில் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் எண்ணிக்கை 4 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டில் இந்த விகிதம் 6 சதவீதமாக உயர்ந்தது. இதன் காரணமாக, நடப்பாண்டில் தேர்வெழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் (2020 நீங்கலாக) சற்று குறைவாக இருந்தது. இதன் காரணமாக, தேர்ச்சிப் பெற்றவர்களின் விகிதமும் சற்று அதிகரித்து காணப்படுகிறது.
தேர்ச்சி பெற்றவர்களில், மாணவிகளின் எண்ணிக்கை 4,21,013 ஆகவும், மாணவர்களின் எண்ணிக்கை 3,82,371 ஆகவும் உள்ளது. மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சிப் பெற்றுய்ள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5.36% ஆக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு (2021 கொரோனா தொற்று நீங்கலாக) மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது.
கடந்த பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 23,957 ஆக இருந்த நிலையில், இந்தாண்டுபொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற எண்ணிக்கை 32,501 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் வாசிக்க: Tamil Nadu 12th Result 2023 Live : 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது : 94.03 சதவீதம் தேர்ச்சி விகிதம்
அதேபோன்று, 97.85 சதம் தேர்ச்சி விகிதத்துடன் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தையும், 97.79 சதத்துடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 97.58 தேர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 12th exam, 12th Exam results