முகப்பு /செய்தி /கல்வி / 12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

12ம் வகுப்பு துணைத் தேர்வுகள்

12ம் வகுப்பு துணைத் தேர்வுகள்

தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத இருக்கும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில், மார்ச் / ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டன. 8,03,385 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 சதமாகும். சரியாக, 47,934 மாணவர்கள் தேர்ச்சிப் பெறவில்லை.  

நடந்து முடிந்த  12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ம் தேதி உடனடி சிறப்புத் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது. மேலும், இந்த துணைத் தேர்வுகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கு 11.05.2023 ( வியாழக்கிழமை) முதல் 17.05.2023 ( புதன்கிழமை) வரையிலான நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், சிறப்பு அனுமதித் திட்டத்தில் 18.05.2023 (வியாழக்கிழமை) முதல் 20.05.2023 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, மாணவர் நலன் கருதி இணையதளம் வழியாக விண்ணப்பிப்பதற்கான நாட்கள் 23.05.2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் 23.05.2023 வரை விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் 2405.2023 (புதன்கிழமை) முதல் 28.05.2023 (வெள்ளிக்கிழமை) வரையிலான நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகிறது

அனைத்து பாடங்களுக்கும் நடத்தப்படும் இந்த துணைத் தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல், இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலே உயர்கல்வியைத் தொடர முடியும்.

விண்ணப்பம் செய்வது எப்படி:

தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத இருக்கும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், தனித்தேர்வர்களாக தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூன் மாத துணைத் தேர்வுக்கு கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக (Service Centres) விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வுக் கட்டணம்:

தேர்வு  அனுமதிச் சீட்டு:

ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை Application Number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால், ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் வாசிக்க: 11, 12ம் வகுப்பு துணைத் தேர்வுகள்... அட்டவணை வெளியீடு... முழு விவரம் இதோ..!

தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்குத் தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டப் பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

மேலும், இத்தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

First published:

Tags: 12th exam, 12th Exam results