முகப்பு /செய்தி /கல்வி / 12ம் வகுப்பு தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

12ம் வகுப்பு தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

காட்சிப்படம்

காட்சிப்படம்

விடைத்தாள்களை கவனமுடன் திருத்தவும், கூட்டல், மதிப்பெண் போடாமல் விடுதல் உள்ளிட்ட தவறுகள் ஏற்படாத வகையில் முறையாக திருத்தம் செய்யவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். இந்த விடைத்தாள்களை திருத்தும் பணிகள், மாநிலம் முழுவதும் 79 மையங்களில்  இன்று தொடங்கிய நிலையில் வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையும் வாசிக்க: 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 18-ல் முழு ஆண்டுத் தேர்வு

விடைத்தாள்களை கவனமுடன் திருத்தவும், கூட்டல், மதிப்பெண் போடாமல் விடுதல் உள்ளிட்ட தவறுகள் ஏற்படாத வகையில் முறையாக திருத்தம் செய்யவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு ஆசிரியர்கள் அலட்சியப்போக்குடனும், செல்போன்கள் எடுத்துச்செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணியில் பிழைகள் செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

top videos
    First published:

    Tags: 12th exam, 12th Exam results