முகப்பு /செய்தி /கல்வி / 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நாளையுடன் நிறைவு

12 ஆம் வகுப்பு தேர்வுகள் நாளையுடன் நிறைவு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஏப்ரல் 10 ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்க இருக்கிறது. அவை முடிவடைந்த பிறகு மே மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நாளையுடன் நிறைவடைகின்றன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கின. இந்த தேர்வை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதாத நிலையில், சர்ச்சை ஏற்பட்டது.

மாணவர்களை கண்டறிந்து, ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் துணைத் தேர்வை எழுதவைக்க பள்ளிக் கல்வித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

top videos

    இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நாளையுடன்  (திங்கள்கிழமை)  நிறைவடைகின்றன. வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகள் திங்களன்று நடைபெறுகின்றன. இதையடுத்து மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10 ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்க இருக்கிறது. அவை முடிவடைந்த பிறகு மே மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

    First published:

    Tags: 12th exam