தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு எழுதிய 9,14,320 மாணவர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவியர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 6.50 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் அறிந்துக்கொள்ளலாம். அதேபோல் தேர்வு முடிவுகள் செல்போன் எண்ணுக்கு SMS வாயிலாக அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ரிசல்ட் வெளியானது
நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 பேர் தேர்ச்சி பெற தவறியுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு துணைத் தேர்வு ஜுன் மாதத்தில் நடத்தப்படும்.மே 23 ஆம் தேதி முதல் 27-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.10-
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 10th Exam, 10th Exam Result, Tamil News