முகப்பு /செய்தி /கல்வி / 10th Result | உயிரிழந்த தந்தை... கூலி வேலைக்கு செல்லும் தாய்... 495 மார்க் எடுத்த சாதனை மாணவன்...!

10th Result | உயிரிழந்த தந்தை... கூலி வேலைக்கு செல்லும் தாய்... 495 மார்க் எடுத்த சாதனை மாணவன்...!

மாண்வன் அர்ஜுன் பிரபாகர்

மாண்வன் அர்ஜுன் பிரபாகர்

திருநெல்வேலியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 495 மதிப்பெண் பெற்று அர்ஜுன் என்ற மாணவர் சாதனைப் படைத்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் - பண்டாரச் செல்வி தம்பதியினரின் மகன் அர்ஜுன் பிரபாகர். திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள நூறாண்டுகள் பழமையான அரசு உதவி பெறும் பள்ளியில் அர்ஜுன் பிரபாகர் படித்து வந்தார். மாணவனின் தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தாய் செல்வி கூலி வேலை செய்து கிடைக்கும் சொற்ப  வருமானத்தில் குடும்பத்தை கவனித்து வருகிறார்.

போதிய வருமானம் இல்லாத நிலை இருந்தாலும் மாணவன் அர்ஜுன் தன்னம்பிக்கையுடன் படிப்பை தொடர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவனின் படிப்பிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பள்ளி ஆசிரியர்கள் வழங்கிவந்துள்ளனர். தொடர்ந்து, படிப்பில் கவனம் செலுத்தி சிறப்பாகப் படித்துவந்த மாணவன் அர்ஜுன், இந்தாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார். இன்று பொதுத்முடிவுகள் வெளிவந்த நிலையில், 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண் பெற்று மாவட்டத்திலேயே முதல் மாணவன் ஆக வந்து சாதனைப் படைத்துள்ளார்.

Also Read : 11th Result Direct link | 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... ரிசல்ட் செக் செய்வது எப்படி?

தமிழில் 97, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 99 மற்றும் சமூக அறிவியலில் 100 என மொத்தம் 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் அர்ஜுன். தந்தை இல்லாமல் ஏழ்மையான சூழ்நிலையில் படித்து இந்த அளவில் மதிப்பெண் பெற்ற மாணவனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. படிப்பிற்கு உதவிய ஆசிரியர்கள், கூலித் தொழில் செய்து படிக்க வைத்த தாய் ஆகியோருக்கு மாணவனின் வெற்றி மகிழ்ச்சியை அளித்துள்ளது.

பாரதியார் பயின்ற இந்த பள்ளியை சேர்ந்த மாணவர் மாவட்ட அளவில் முதலாவது மதிப்பெண்ணை பெற்று பள்ளியையும், பாரதியையும் தலை நிமிர செய்துள்ளார் என்கிறார்கள் அவரது ஆசிரியர்கள்.

செய்தியாளர்;  சிவமணி

First published:

Tags: 10th Exam, 10th Exam Result