அச்சத்தின் காரணமாக பொதுத் தேர்வெழுதாத மாணவர்கள் கண்டறியப்பட்டு கவுன்சிலிங் தரப்படும் என்று மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 13ம் தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற தமிழ்ப்பாடத் தேர்வில் 50,000க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. அதன்பின் நடைபெற்ற, ஆங்கில மொழித் தேர்விலும் 50,000 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற செய்திகள் வெளியாகியன. மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்கு வரமால் இருந்தது, முக்கிய பேச்சுப் பொருளாக உருவானது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில், பொதுத் தேர்வுக்கு வராத மாணவர்கள் குறித்து ஆராய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தேர்வுக்கு வராத மாணவர்கள் கண்டறியப்பட்டு கவுன்சிலிங் கொடுக்கப்படும். வரும் ஜூன் மாதத்தில் மீண்டும் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: UPSC Jobs: மத்திய அரசில் 577 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!
மேலும், இரண்டு மொழித் தேர்வுகளையும் அச்சம் காரணமாக எழுதாத மாணவர்கள், அடுத்து வரும் தேர்வுகளை எழுதுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதேபோன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் முழுமையாக பங்கேற்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். பணி தொடர்பாக பெற்றோர் இடம்பெயர்ந்து வருவதும் மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு காரணமாக உள்ளது என்றும், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் அதிக அளவில் தேர்வு எழுத வரவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு
மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மார்ச் 24ம் தேதி பெற்றோர் ஆசிரியர் குழு கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 12th exam, Anbil Mahesh Poyyamozhi, Minister Anbil Mahesh