முகப்பு /செய்தி /கல்வி / தனியார் பள்ளிகளில் இலவச கல்வி... இன்றே கடைசி நாள்... உடனே விண்ணப்பியுங்கள்..!

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி... இன்றே கடைசி நாள்... உடனே விண்ணப்பியுங்கள்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Tamil Nadu RTE Admission 2023 | அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்க விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரம் குறைந்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவசமாக பயில்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது.

அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை, 25 சதவிகித ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் , இந்த திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கியது.  விண்ணப்பிக்க இன்றுதான் கடைசி நாள்.

கடந்த ஆண்டு, அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்கீழ், ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 186 பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு குறைந்துள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இது சென்ற ஆண்டை விட 5000 குறைவாகும்.

மேலும் படிக்க... சித்தராமையா முதல்வரானால் என்ன தவறு...? டி.கே.சிவக்குமார் பேட்டி..!

விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்களின் விவரம் 21ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

top videos
    First published:

    Tags: Education, School Admission