முகப்பு /செய்தி /கல்வி / ஆசிரியர் பணி நியமன வயது வரம்பை 57ஆக உயர்த்த வேண்டும்... சென்னையில் உண்ணாவிரத போராட்டம்...!

ஆசிரியர் பணி நியமன வயது வரம்பை 57ஆக உயர்த்த வேண்டும்... சென்னையில் உண்ணாவிரத போராட்டம்...!

ஆசிரியர்கள் போராட்டம்

ஆசிரியர்கள் போராட்டம்

போராட்டத்தின் போது 2 ஆசிரியைகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆசிரியர் நியமனத்தில் நிர்ணயிக்கப்பட்ட வயது உச்சவரம்பை 57 ஆக உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆகவும், ஓய்வு பெறும் வயது 58 ஆகவும் இருந்தது. பின்னர் 2019ல் பணியாளர்களின் ஓய்வுக்கான வயது வரம்பு 60 ஆக அதிகரிக்கப்பட்டது. அதேசமயம் பணி நியமத்திற்கான உச்ச வரம்பு 40 வயதாக குறைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த, 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் வயது வரம்பை தளர்த்தக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து 2022ல் பொதுப் பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 50 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் நியமனத்தில் நிர்ணயிக்கப்பட்ட வயது உச்சவரம்பை நீக்கி 57 வயதாக உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நலச்சங்கம் சார்பில் சென்னை அன்பழகன் வளாகத்தில் மூன்றாவது நாளாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக தேர்தல் வாக்குறுதி 177-ன் படி பணி வழங்க வேண்டும் என்று வலியுறத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். 3 நாட்கள் தொடர் போராட்டத்தில் இருந்து வரும் பயிற்சி ஆசிரியர்களுக்கு, பாமக தலைவர் ஜி.கே.மணி நேரில் சென்று ஆதரவளித்தார்.

இதையும் வாசிக்கஆர்வம் இருந்தா மட்டும் இஞ்சினீயரிங் படிங்க... அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி..!

ஆசிரியர்களுக்கு என்றும் துணையாக பாமக இருக்கும் என்றும் தெரிவித்தார்.போராட்டத்தின் போது 2 ஆசிரியைகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

First published:

Tags: Govt teachers, Teachers Protest