இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பதிவு துவங்கிய 10 நாளில் 80,000-க்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்திருப்பதாக தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன் தெரிவித்துள்ளார்.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு கடந்த 20ஆம் தேதி துவங்கிய நிலையில், 10 நாட்களுக்குள்ளாக 80,000 பேர் விண்ணப்பித்திருப்பதாக தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தக்கூடிய தனியார் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்பில் உள்ள மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்கள் ஏழை, எளிய பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி பயிலலாம்.
இதையும் வாசிக்க: நீட் தேர்வு வேண்டாம்.. இந்த படிப்புகள் உங்க டாக்டர் கனவை நனவாக்கும்..!
தமிழகத்தில் 8,000 தனியார் பள்ளிகளில், 88,000இடங்கள் உள்ள நிலையில், இதற்கான ஆன்லைன் பதிவு கடந்த 20ஆம் தேதி துவங்கியது. 10 நாட்களில் 80,000 பேர் பதிவு செய்திருப்பதாக தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன் தெரிவித்துள்ளார். மே 18ஆம் தேதி வரை பதிவு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: RTE