முகப்பு /செய்தி /கல்வி / School Reopen | ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு... அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி அறிவிப்பு..!

School Reopen | ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு... அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி அறிவிப்பு..!

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

School Reopen Date Announced | பள்ளிகள் திறப்பு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதனையடுத்து, ஜூன் 7ம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிக்கையில்,  “முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு...!

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கோடை விடுமுறை என்பது மாணவர்களை ஆசுவாசப்படுத்த கூடிய காலம் என்றும், கோடை விடுமுறை காலத்திலும் மாணவர்களுக்கான பாடங்களை நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும். இதை வேண்டுகோளாக முன்வைக்கின்றேன். ஆங்கில பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்ற திறமைகளுக்கான காலமாக கோடை விடுமுறையை பயன்படுத்துங்கள் என்றும் கூறினார்.

top videos
    First published:

    Tags: Education department, Minister Anbil Mahesh, School Reopen, Students