முகப்பு /செய்தி /கல்வி / NEET 2023 : நீட் நுழைவுத் தேர்வு - விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

NEET 2023 : நீட் நுழைவுத் தேர்வு - விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

நுழைவுத் தேர்வு

நுழைவுத் தேர்வு

NEET 2023 : தமிழ்நாட்டில் இருந்து சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

2023ஆம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மார்ச் 6 ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இதுவரை தமிழ்நாட்டில் இருந்து சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 மணிநேரம் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும். இயற்பியல் பாடத்தில் இருந்து 45 கேள்விகளும், வேதியியல் பாடத்தில் இருந்து 45 கேள்விகளும், உயிரியல் பாடத்தில் இருந்து 90 கேள்விகளும் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள். மொத்த மதிப்பெண்கள் 720 ஆகும்.

கேள்விகள் பல்குறித்தேர்வு (Multiple choice Questions) வினாக்களாக இருக்கும். அதாவது, ஒவ்வொரு வினாவிற்கு சரியான விடை உட்பட நான்கு விடைகள் இடம்பெறும். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடா, உருது, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்படும். விண்ணப்பிக்கும் போதே, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

First published:

Tags: Neet, Neet Exam, Neet in english, NEET Result, Tamil News