முகப்பு /செய்தி /கல்வி / நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...!

காட்சிப்படம்

காட்சிப்படம்

விண்ணப்பங்களை, 2023 ஏப்ரல் 15ம் தேதி வரை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம்  ஏப்ரல் 15ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு  நீட்  நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2023ம் ஆண்டிற்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த மார்ச் 6ம் தேதி அறிவித்தது. விண்ணப்பங்கள் ஏப்ரல் 6ம் தேதி வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்கமாறு பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில்  கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு, விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கிய கடைசி நாளை எதிர்வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

2023 நீட் தேர்வுக்கு, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், பழைய விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நினைப்பவர்கள் இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

NEET Exam Reopening Application
NEET Exam Reopening Application

top videos

    விண்ணப்பங்களை, 2023 ஏப்ரல் 15ம் தேதி வரை https://neet.nta.nic.in/,என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். இந்தத் தேதிக்குப்பின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு,  www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    First published:

    Tags: Neet, Neet Exam