முகப்பு /செய்தி /கல்வி / நாளை நீட் தேர்வு- தமிழகத்தில் 31 நகரங்களில் தேர்வு மையம்

நாளை நீட் தேர்வு- தமிழகத்தில் 31 நகரங்களில் தேர்வு மையம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையிலே மாணவர்களுக்கு மருத்துவ இடம் வழங்கப்படும். இந்தநிலையில், நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெறும் தேர்வை, 20.87 லட்சம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர்.

தமிழ்நாட்டில் 95,823 மாணவிகள், 51,757 மாணவர்கள் என 1,47,581 பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழ்நாட்டில் மாணவர்களை விட மாணவியர் அதிகமானோர் நீட் தேர்வு எழுதவுள்ளது குறிப்பிடத்தகக்து. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 31 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறவுள்ளது.

top videos

    தேர்வு நுழைவுச் சீட்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை, மாற்று திறனாளிகளாக இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை தேர்வர்கள் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Neet Exam