முகப்பு /செய்தி /கல்வி / மாநில கல்விக் கொள்கை : துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி நாளை ஆலோசனை

மாநில கல்விக் கொள்கை : துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி நாளை ஆலோசனை

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

state education policy: மாநில கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்த உள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

மாநில கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களோடு நாளை (புதன்கிழமை) ஆலோசனை நடத்த இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என். ரவி, வரும் 5ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஆளுநர் தரப்பிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவுகள் அல்லது தகவல்கள் வரும் பட்சத்தில், மாநில அரசை துணைவேந்தர்கள் கலந்து ஆலோசிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இதையும் வாசிக்கஆசிரியர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு செயல்படுகிறதா அல்லது உறங்குகிறதா?- அன்புமணி ராமதாஸ் காட்டமான கேள்வி

இந்த நிலையில், இது தொடர்பாக, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, மாநில கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்தார். ஆளுநர் அழைக்கின்ற கூட்டத்தில் கலந்து கொள்வது தடை இல்லை என்றும், அது அவரவர் விருப்பம் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

First published:

Tags: Minister Ponmudi