பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தொடங்கிவைத்தார். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் ஜூன் 4 வரை விண்ணப்பிக்கலாம். www.tneaonline.org எனும் இணையதள வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்கிவைத்தப் பின் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2ல் தொடங்குகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 7 அன்று தொடங்கும்.
மொத்தம் 4 கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடக்கும், 3.10.2023 வரை கலந்தாய்வு நடைபெறும். 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. 2023-24 ம் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு மே 8-ம் தேதி தொடங்கும். மே 19 வரை விண்ணப்பிக்கலாம். மொத்த 1,07,395 இடங்கள் உள்ளன.
2,98,400 பேர் கடந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர். இனி அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தனித்தனியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. 5 கல்லூரிகள் வரை விண்ணப்பிக்கும் போது 50 ரூபாய் மொத்தமாக செலுத்தினால் போதும். 5 கல்லூரிகளுக்கு மேல் விண்ணப்பிக்கும் போது கூடுதல் 50 தனித் தனியாக செலுத்தவேண்டும். www.tngasa.in என்கிற இணையதள முகவரியில் கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதிக மாணவர் சேர்க்கை தமிழகத்தில் நடந்துள்ளது. இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை 53% சதவிகிதமாக உள்ளது. இந்திய அளவில் முதல் 100 இடங்களில் 18 கல்லூரிகள் தமிழகத்தை சேர்ந்தவை. சென்னை பல்கலைக்கழகம் உலக அளவில் 547 வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் சென்னை பல்கலைக்கழகம் 12 வது இடத்தில் உள்ளது. சென்னை பல்கலைக்கழகம் குறித்து ஆளுநர் தவறான புள்ளிவிவரத்தை சொல்லியுள்ளார்.
ஆளுநர் அரசியலுக்காக பேசுகிறார். தமிழகத்தில் கல்வி சிறப்பாக உள்ளது என ஆளுநரே நிகழ்சிகளில் பேசியுள்ளார். கடந்த காலங்களில் பல்கலைக்கழங்களில் அரசியல் புகவில்லை. இப்போதுதான் ஆளுநர் அரசியல் செய்கிறார்.
திராவிட மாடல் இத்துப்போன மாடல்... ஆளுநர் கூறியது சரி... சீமான் காட்டம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Engineering counselling