தற்பொழுது இருக்கக்கூடிய கல்வியை கொரோனாவிற்கு முன்பு கொரனாவிற்கு பின்பு என பார்க்க வேண்டிய உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் திருவரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வில் திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ’தமிழக முதல்வர் ஆணைப்படி அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் சென்று நேரடியாக பொதுமக்களிடம் மணுக்களை பெற்று அதிகாரிகளிடம் உடனடியாக கொடுத்து பிரச்சினைகளை தீர்க்க உத்தரவிட்டார்.
அதன்படி இன்று என்னுடைய தொகுதியான திருவரம்பூர் 46 வது வார்டு பகுதியில் நடைபெற்ற மனுக்கள் பெரும் நிகழ்வில் கலந்து கொண்டேன். பாதாள சாக்கடை, சாலைகள் உள்ளிட்ட விட்டுப்போன பணிகள் குறித்து பொதுமக்கள் மனுக்களை அளித்துள்ளனர். அந்த மனுக்களை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.
2021 -2022 ஆண்டில் இடைநின்ற 1.88 லட்சம் மாணவர்களை தேடி கண்டுபிடித்து, 2022 - 2023 கல்வியாண்டில் பள்ளியில் சேர்த்து விட்டோம். இதில் பன்னிரண்டாம் வகுப்பில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுதாமல் பத்தாம் வகுப்பில் இருந்து ஆல் பாஸ் ஆனவர்கள். எனவே பொது தேர்வு என்றால் அவர்களுக்கு இன்னமும் பயம் இருக்கிறது. அவர்களை தயார் செய்ய ஊக்கப்படுத்தும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களான 15 மாவட்டங்களில் உள்ள 45 பிளாக்குகளுக்கு, பெற்றோர்கள், ஆசிரியர்கள் நண்பர்களிடம் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து 1,000 ஆசிரியர்களை கொண்டு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியானது ஒன்பதாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை 1.25 லட்சம் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கல்வியில் பின்தங்கிய 15 மாவட்டங்கள் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களுக்கும் இது போன்ற பயிற்சி கொடுக்க கையேடு தயாரித்து கொடுக்க வேண்டும் என இன்று உத்தரவு பிறப்பித்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார்.
இடை நின்ற மாணவர்கள் 1.88 லட்சம் பேரில் சிலர் அரசு கொடுக்கின்ற சலுகைகளை பெற்றுக் கொண்டு பயம் காரணமாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளியில் இருந்து நின்று விடுகின்றனர். கடந்த ஆண்டு 32,000 என்ற ஒரு அவரேஜ் ஆன ஆப்சன்ட் இருந்த போதும் பரிட்சை முடிந்த பின்பு ஆப்சன்ட் ஆன 53 ஆயிரம் பேர் தேர்வுக்கு அப்ளை செய்ய வைத்து அதில் 51 ஆயிரம் பேர் தேர்வு எழுதி உள்ளனர்.
தற்பொழுது இருக்கக்கூடிய கல்வியை கொரோனாவிற்கு முன்பு கொரனாவிற்கு பின்பு என பார்க்க வேண்டிய உள்ளது.
குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களே குழந்தை போல் நடந்து கொள்ளும் மனப்பாங்கைப் பார்க்க முடிகிறது. பள்ளி மாணவர்கள் எதனால் இடை நின்றனர் என கவனிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுகளில் அது குறையும் என எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்தார்.
செய்தியாளர்: சே.கோவிந்தராஜ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister Anbil Mahesh, Trichy