முகப்பு /கல்வி /

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை

Manonmaniam Sundaranar University Admissions : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது..

  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் ஜி அண்ணாதுரை வெளியிட்ட செய்தி குறிப்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் சங்கரன்கோவில் சேரன்மகாதேவி நாகம்பட்டி புளியங்குடி திசையன்விளை பணகுடி ஆகிய இடங்களில் பல்கலைக்கழக கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த ஆறு கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது .

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

இக்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் விவரங்களை அறியலாம். இளம் நிலை படிப்புக்கு 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதுகலை படிப்புக்கு பல்கலைக்கழகத்தின் இளம்நிலை தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

First published:

Tags: Local News, Tirunelveli