முகப்பு /செய்தி /கல்வி / இலவச பட்டப்படிப்பு... பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு செம வாய்ப்பு... சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

இலவச பட்டப்படிப்பு... பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு செம வாய்ப்பு... சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இலவச பட்டப்படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் இலவச  பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் கடந்த 2010 -11ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட  மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் இலவச இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க  12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள், விதவை தாயின் குழந்தைகள், முதல் பட்டதாரி மாணவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  மாணவர்களின் குடும்ப வருமானம்  ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்குக் கீழ் இருக்க வேண்டும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : பொதுத்தேர்வில் கணிதப் பாடத்தில் எளிதாக மதிப்பெண் பெறுவது எப்படி? தஞ்சை ஆசிரியை அறிவுரை!

2022 -23ம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்கள், பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களுக்குள் https://www.unom.ac.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Education, Madras University