முகப்பு /செய்தி /கல்வி / தோல்வியடைந்த மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு... கேந்திரியா வித்தியாலயாவுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தோல்வியடைந்த மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு... கேந்திரியா வித்தியாலயாவுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கேந்திரிய வித்யாலயா பள்ளி

கேந்திரிய வித்யாலயா பள்ளி

தோல்வியடைந்த மாணவர்கள் தேர்வு எழுதும் விவகாரம் தொடர்பாக கேந்திரியா வித்யாலயாவுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில், 11ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரங்களில் துணைத் தேர்வு நடத்த கேந்திரிய வித்யாலயாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனவும் கூறி ஏராளமான மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவிக்கு, துணைத் தேர்வு எழுத சென்னை உயர் நீதிமன்றம், 2018ல் அனுமதி வழங்கியுள்ளதாக மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்களுக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று வாதிடப்பட்டது.

ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவு, குறிப்பிட்ட அந்த மாணவி வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்று பெறுவதற்காகவே துணைத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டதாகவும், அந்த உத்தரவு இந்த வழக்குக்கு பொருந்தாது என்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதியில்லை என விதிகள் உள்ளதாகவும் கேந்திரிய வித்யாலயா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது இதுதான்...? விரிவான தகவல்கள்..!

top videos

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும். இது அவர்களின் எதிர்காலம் என்பதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் 11ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு ஒருமுறை நடவடிக்கையாக மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என கேந்திரிய வித்யாலயாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    First published:

    Tags: Kendriya vidyalaya school