CBSE Class 10,12 results Updates: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10, 12ம் வகுப்பின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண ஆர்வமாக உள்ளனர்.
சிபிஎஸ்இ வாரியத்தின், cbse.nic.in, cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளண்களின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம். கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தாண்டு முதல் தேர்வு முடிவுகளில், மாணவர்கள் மத்தியில் ஏற்படும் ஆரோக்கியமற்ற போட்டி சூழல் மற்றும் மன அழுத்தத்த்தை குறைக்கும் வகையில் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடும் வழக்கத்தை சிபிஎஸ்இ கைவிட்டுள்ளது. பிராந்திய ரீதியாக தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை(மே 8ம் தேதி) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி/மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இதையும் வாசிக்க: என்ன படிப்பது? எங்குப் படிப்பது? அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுக் குழு - தொலைபேசி எண்ணும் அறிவிப்பு
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 10th Exam Result, 12th Exam results, CBSE