குரூப்-1 தேர்வின் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ஆகிய பணிகளை உள்ளடக்கிய 2022-ம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அந்த தேர்வுக்கு 3.22 லட்சம் பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இதற்கான, முதல்நிலைத் தேர்வு நவம்பர் 19-ம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்றது. அந்தத் தேர்வினை 1.9 லட்சம் பேர் மட்டுமே எழுதினர். வருகைப்பதிவு எண்ணிக்கை 59% ஆகும். அதாவது, விண்ணப்பித்தவர்களில் 41% பேர் தேர்வெழுத வரவில்லை.
கொரோனா தொற்றுக்கு முந்தைய காலங்களில், குரூப் 1 தேர்வுக்கு வரதாவர்களின் எண்ணிக்கை சராசரி 30% ஆக கணக்கிடப்படும் நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்திருந்தது. குரூப் 1- தேர்வை எழுதியவர்களை முதல்நிலைத் தேர்வு முடிவுகளை ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்தநிலையில், முதல்நிலைத் தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இதில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. முதன்மைத் தேர்வுக்கு தேர்வு பெற்றவர்கள் 200 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி உரிய ஸ்கேன் செய்து ஆவணங்களை மே மாதம் 8ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.